வில் ஸ்மித்தை வம்புக்கு இழுக்கும் கிறிஸ் ராக்கின் சகோதரர்!
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தன்னுடன் குத்துச்சண்டை செய்ய வேண்டும் என நடிகர் கிறிஸ் ராக்கின் சகோதரர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்கர் மேடையில் தனது மனைவியை கேலி செய்ததற்காக நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்கர் நிகழ்ச்சிகளில் வில் ஸ்மித் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கிறிஸ் ராக்கின் சகோதரர் கென்னி ராக் தன்னுடன் குத்துச்சண்டையிட வில் ஸ்மித்தை அழைத்துள்ளார்.
கென்னி ராக் புளோரிடாவில் ஜூன் 11ஆம் திகதி நடைபெற இருக்கும் நட்சத்திர குத்துச்சண்டை போட்டியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக சண்டையிடும் நட்சத்திரம் யார் என்று இன்னும் முடிவாகவில்லை.
இந்த நிலையில் தான் வில் ஸ்மித் தன்னுடன் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க வேண்டும் என்று கென்னி ராக் சவால் விடுத்துள்ளார். தன்னை விட வில் ஸ்மித் உயரமானவராக இருந்தாலும் தன்னால் அவரை வீழ்த்த முடியும் எனவும், அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்திருப்பதில் தனக்கு சந்தேகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் வில் ஸ்மித் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.