ஆஸ்கர் விழாவில் வில் ஸ்மித் அறைந்த சம்பவம்: பொலிஸ் புகார் கொடுக்க மறுத்த நடிகர்!
ஆஸ்கர் மேடையில் எல்லோர் முன்னுலையிலும் தன் கன்னத்தில் அறைந்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீது காவல்துறையில் புகார் கொடக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் கிரிஸ் ராக் மறுத்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், நேற்று நடந்த ஆஸ்கார் விழாவில் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் ஸ்மித்தின் முடியில்லாத தலையை பற்றி கூறி காமெடி செய்துள்ளார்.
இதற்கு கடுப்பான ஸ்மித், அப்போதே மேடையேறி கிறிஸ் ரெக்கை கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு மீண்டும் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரை அறைந்ததை பெரிதாக ஏடுத்துக்கொள்ளாத க்றிஸ் ராக்கை பார்த்து "இன்னொரு முறை உன் வாயிலிருந்து என் மனைவியின் பெயர் வரக்கூடாது" என எச்சரித்தார்.
இந்த சம்பவம் மொத்த நிகழ்ச்சிலும் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. விருது வென்ற கலைஞர்கள் அல்லது படங்களைப் பற்றி பேசுவதைவிட இந்த சம்பவம் குறித்த செய்திகள் தான் உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பின்பு, தான் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட வில் ஸ்மித், தனது மனைவியின் மீது வைத்திருந்த காதல் தான் இவ்வாறு செய்யத்தூண்டியது என்று கூறினார்.
இருப்பினும் இந்த் சம்பவம் குறித்து வில் ஸ்மித் மீது விசாரணை தொண்டகவுள்ளதாக ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அறை வாங்கிய பிறகு அவரது அமைதியான எதிர்வினைக்காக ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்.
சமீபத்திய தகவல்களின்படி, வில் மீது மேடையில் தன்னை தாக்கியதற்காக காவல்துறையில் புகார் அளிக்க கிறிஸ் ராக் மறுத்துவிட்டார்.