பூகம்பத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்! பிரிவில் வாடும் காதல் மனைவி வெளியிட்ட புகைப்பங்கள்
துருக்கியே நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த காணா நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சுவின் காதல் மனைவி, அவருடன் எடுத்த சில குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரிவால் வாடும் காதல் மனைவி
கிறிஸ்டியன் அட்சுவின் (Christian Atsu) பிரிவால் வாடும் அவரது மனைவி மரியா கிளாரி-ருபியோ (Marie-Claire Rupio), இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த கிறிஸ்டியன் அட்சு மற்றும் மரியா கிளாரி-ரூபியோவுக்கு, மூன்று குழந்தைகள் (2 ஆண் மற்றும் ஒரு பெண்) உள்ளனர்.
Goal/Instagram
முன்னாள் செல்சியா வீரரான அட்சுவும் அவரது மனைவி மரியாவும் ஆரம்பகால டேட்டிங் வாழ்க்கையில் சந்தித்ததால் குழந்தை பருவ காதலர்கள் ஆவர்.
2011-ஆம் ஆண்டு Rio Ave கிளப்பில் விளையாடிய நேரத்தில் அவர்கள் சந்தித்தபோது அட்சுவுக்கு 19 வயது, கிளாரி 17 வயது சிறுமி.
GHPage
ஒரு வருடத்தில் திருமணம்
2011-ல் சந்தித்த ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டு, அட்சு மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் கொன்ற துருக்கியில் நிலநடுக்கம் வரை அவர்கள் ஒன்றாக காதலுடன் இருந்தனர்.
GhanaWeb
கணவரின் மரணத்திற்குப் பிறகு வெளியுலகத்திடம் எதுவும் பேசாத மரியா, தனது குடும்ப புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டார்.
முன்னதாக அவர் தனது மகன் இளையோர் போட்டியில் வென்ற கோப்பையை கையில் வைத்திருக்கும் படத்தையும் "அவரது அப்பாவை பெருமைப்படுத்துவார்" என்ற தலைப்பில் வெளியிட்டார்.
GhanaWeb
GhanaWeb