யூரோ கால்பந்து போட்டியில் திடீரென சரிந்து விழுந்து மூச்சு பேச்சற்று கிடந்த வீரர்! வெளியான வீடியோ காட்சி
யூரோ கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தின் போது டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்ஷன் நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலக கோப்பை தொடருக்கு அடுத்து கால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழாவாக யூரோ கோப்பை கால்பந்து போட்டி, நேற்று முன் தினம் கோலகமாக துவங்கியது. அதன் படி இன்றைய போட்டி டென்மார்க்கில் இருக்கும் Parken மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில், பின்லாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. ஆட்டத்தின் பாதி நேரம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அடுத்த பாதி நேரம் துவங்கிய நிலையில், ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று டென்மார்க் வீரர் Christian Eriksen நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
Christian eriksen just collapsed on the pitch please pray for him 😭😭😭😭😭🙏🙏🙏 likely heart attack hopefully he will be awake by now pic.twitter.com/3NsAvNVAKS
— Badmus (@Badmus60178865) June 12, 2021
இதைக் கண்ட சக வீரர் Simon Kjær உடனடியாக அவர் அருகில் சென்று பார்த்த போது, Christian Eriksen பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்துள்ளார். இதனால் அவர் உடனடியாக மருத்துவ குழுவை அழைக்க, அவர்கள் முதலுதவி சிகிச்சை கொடுத்து, அழைத்துச் சென்றனர்.
When Christian Eriksen collapsed on the pitch, Kjær was first to help him and summon the medical team to quickly get onto the pitch. After, he guided his teammates to cover Eriksen while he received medical treatment and consoled Eriksen's wife Sabrina.
— 433 (@433) June 12, 2021
Nothing but respect. ❤️🇩🇰 pic.twitter.com/GrY8oCXc4D
இதன் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இது போன்ற சூழ்நிலையில், போட்டி நடந்தால் அது நன்றாக இருக்காது, வீரர்களின் மனநிலையில் சரியில்லாமல் இருக்கும் என்று கருத்து, ஆட்டத்தின் ரெப்ரி Anthony Taylor போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்கள் பலரும், தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் விரைவில் Christian Eriksen நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் Christian Eriksen சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரத்து செய்யப்பட்ட இந்த போட்டி இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022