குடும்பத்துடன் பலியான ஜேர்மன் ஹாலிவுட் நடிகர்! கடலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்
விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் குடும்பத்துடன் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர்
ஜேர்மனியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51). இவர் சிறிய ரக விமானம் ஒன்றில் தனது குடும்பத்துடன் பயணித்தபோது, பெக்வியாவின் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இதில் ஆலிவர், அவரது இரண்டு மகள்கள் மற்றும் விமானி ஆகிய 4 பேரும் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) மற்றும் அவருடன் பலியானவர்களின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை
பொலிஸார் இதுகுறித்து கூறுகையில், 'ஆலிவர் குடும்பத்தின் சிறிய விமானம் அருகிலுள்ள சிறிய தீவுக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிக்கலை சந்தித்தது. நான்கு பேரின் உடல்கள் கடலில் இருந்து கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவ பயிற்சியாளரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
உடல்கள் கடலோர காவல்படையின் கப்பலில் செயின்ட் வின்சென்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கிங்ஸ்டவுன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என தெரிவித்துள்ளனர்.
Axelle/Bauer-Griffin/Filmmagic
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |