நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ., ஜாம்பவான் ரொனால்டோவின் ஜெர்சி ஏலம்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போர்ச்சுகல் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) ஜெர்சியை துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் ஏலம் விட்டுள்ளார்.
ரொனால்டோவின் ஜெர்சி ஏலம்
மெரிஹ் டெமிரல் (Merih Demiral) தனது தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த ரொனால்டோவின் ஜெர்சியை ஏலம் விட்டதாக இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார்.
ஜுவென்டஸ் கிளப்பில் ரொனால்டோவுடன் இணைந்து விளையாடிய டெமிரல், செவ்வாயன்று தனது ட்விட்டர் பதிவில், போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜுவென்டஸ் ஜெர்சியை ஏலம் விடுவதாக தெரிவித்தார்.
Getty
"நான் கிறிஸ்டியானோவுடன் பேசினேன். துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகவும் வருத்தமளிப்பதாக அவர் கூறினார். எனது சேகரிப்பில் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலம் விடுகிறோம்” என்று டெமிரல் கூறினார். "ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் பூகம்ப மண்டலத்தில் பயன்படுத்தப்படும்." என்று அவர் தனது பதிவில் கூறினார்.
மற்ற அணி வீரர்கள் நன்கொடை
டெமிரலின் முன்முயற்சியால் மற்ற முன்னாள் அணி வீரர்கள் இத்தாலிய வீரர் லியோனார்டோ போனூசி மற்றும் அர்ஜென்டினா வீரர் பாலோ டிபாலா ஆகியோர் கையெழுத்திட்ட ஜெர்சிகளை நன்கொடையாக வழங்கினர்.
புதன்கிழமை, டெமிரலின் ட்விட்டர் கணக்கின்படி, மூன்று ஜெர்சிகளும் மொத்தம் $265,454 (இளநகை பானுமதிபில் ரூ. 9.6 கோடி) விற்கப்பட்டன.
SportsKeeda
துருக்கி - சிரியா நிலநடுக்கம்
துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் பெரும் அழிவு ஏற்பட்டது. இரு நாடுகளிலும் தற்போது கிட்டத்தட்ட 20,000-க்கும் அதிகமானோர் இறந்தனர்.
5.4 முதல் அதிகப்படியாக 7.8 ரிக்டர் அளவிலான 5 பயங்கரமான நிலநடுக்கங்கள் அப்பகுதியை தாக்கின. மீட்பு முயற்சிகளுக்கு உதவ பல நாடுகள் மீட்பு மற்றும் மருத்துவ குழுக்களை இரு நாடுகளுக்கும் அனுப்பியுள்ளன மற்றும் நிதி திரட்டும் நிவாரண பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கால்பந்தில் விளையாடி வருகிறார். 2025 வரை அல்-நஸ்ர் கிளப்புடன் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவர் தற்போது தனது குடும்பத்துடன் சவுதி தலைநகர் ரியாத்தில் வசிக்கிறார்.