லண்டன் பூங்காவில் கிடந்த மர்ம பார்சல்... வெடிகுண்டு நிபுணர்கள் குவிப்பு
லண்டனிலுள்ள பூங்கா ஒன்றில், மர்ம பார்சல் ஒன்று கிடந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
லண்டன் பூங்காவில் கிடந்த மர்ம பார்சல்...
இன்று காலை உள்ளூர் நேரப்படி, 7.30 மணியளவில், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள காலேஜ் கிரீன் பார்க் என்னும் பூங்காவில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பது குறித்த தகவல் கிடைத்ததால், அங்கு பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.

அந்த பகுதியில் குடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றின் உதவியுடன் அந்த பார்சலை பரிசோதிக்க, 45 நிமிடங்களுக்குப்பின், அதற்குள் குண்டு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

பெரும் பரபரப்பை உருவாக்கிய அந்த பார்சல், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Miatta Fahnbullehவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஆகும்.
அதாவது, Miatta அந்த பார்சலை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அது அவருக்கு டெலிவரி செய்யப்படாமல் இன்னொரு இடத்தில் போடப்பட்டுள்ளது.

அந்த பார்சலில், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |