பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த கொடூரத் தாக்குதலில் 80 வயது மூதாட்டி கொல்லப்பட்டுள்ளார்.
80 வயது மூதாட்டி கொலை
வில்ட்ஷயரின்(Wiltshire) டெவைசஸ்(Devizes) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த கொடூரத் தாக்குதலில் 80 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கீப்பர்ஸ் சாலையில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் அவசர உதவி குழுவினர் விரைந்து சென்றனர்.

அங்கு தாக்குதலில் காயமடைந்து கிடந்த மூதாட்டிக்கு அவசர உதவிகள் செய்தும், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
63 வயதுடைய பெண்
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மூதாட்டிக்கு நன்கு அறிந்த 64 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவருடைய காயங்கள் உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தற்போது உயிரிழந்த மூதாட்டியின் உறவினர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |