கிறிஸ்துமஸ் பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டன் மக்கள் விழிப்புடன் இருக்க காவல்துறை எச்சரிக்கை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங், சந்தைகளைப் பார்வையிடவும் மற்றும் தலைநகரின் போக்குவரத்தை பயன்படுத்தும் லண்டன் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தீவிரவாதிகள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்தக் கூடும் எனவும், மக்கள் கூடுதம் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
@getty
குறிப்பாக மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் தொடர்பில் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
உலகில் எங்கு அச்சுறுத்தும் சம்பவம் நடந்தாலும் அதன் பிரதிபலிப்பு என்பது போன்று, லண்டனில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்றே காவல்துறை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
2017ல் பிரித்தானியா முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு சிரியாவில் நடந்த போர் தான் காரணம் என கமாண்டர் டொமினிக் மர்பி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகள்
இதனிடையே, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவான தகவல்களை ஒன்லைனில் வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் தெற்கு லண்டனில் 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளதாக கமாண்டர் மர்பி தெரிவித்தார்.
@getty
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை கணிசமான அளவில் உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகர காவல்துறை கவலை கொண்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்கள், தவறிழைப்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. மேலும், குறைந்த அளவு நுட்பத்துடன் முன்னெடுக்கப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு நீண்ட நாட்கள் திட்டமிடப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ள கமாண்டர் மர்பி,
கூட்டத்தினிடையே வாகனத்தை செலுத்துவது அல்லது கூட்டத்தில் கண்மூடித்தனமாக கத்தியை பயன்படுத்துவது உள்ளிட்டவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |