இனி குறைந்த விலையில் லேப்டாப் கிடைக்கும்! வெளியான அசத்தல் அறிவிப்பு
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து Chromebook லேப்டாப்களை உற்பத்தி செய்ய உள்ளதாக பிரபல HP நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக HP வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கு அருகே உள்ள Flex ஆலையில் Chromebooks உற்பத்தி செய்யப்படும் என கூறியுள்ளது.
மேலும், HP இந்திய நிறுவனத்தின் மூத்த இயக்குநர் விக்ரம் பேடி இதுகுறித்து கூறுகையில், 'அனைவருக்கும் சமமாக டிஜிட்டல் சேவை கிடைக்க வேண்டும் என்பதில் HP உறுதியாக உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் பல புதுமையான முயற்சிகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
Chromebook லேப்டாப்களை இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் இங்குள்ள மாணவர்களால் எளிதாகவும், குறைவான விலையிலும் கணினி சேவைகளை பெற முடியும்' என தெரிவித்துள்ளார்.
Shutterstock
இந்த அறிவிப்பின் மூலம், இந்தியாவில் அதிக விலைக்கு லேப்டாப் வாங்க முடியாத மாணவர்களுக்கு குறைவான விலையில் இனி கணினி சேவைகள் கிடைக்கும் என்றும், பள்ளிகள் மட்டுமன்றி இதர கல்வி நிலையங்களும் இதனால் பயன்பெறும் என்றும் கூறப்படுகிறது.
Digit
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |