கோயிலாக மாறிய தேவாலயம்.., கிறிஸ்தவ மத போதகர் அர்ச்சகராக மாறி வழிபாடு
கிராம மக்கள் இந்துக்களாக மாறியதால் தேவாலயம் கோயிலாக மாறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான ராஜஸ்தான், பன்ஸ்வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் கராசியா என்பவர் கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளார்.

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை?
பின்னர், தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் கட்டி பிரார்த்தனை செய்து வந்துள்ளார். இதில், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்தனர். இதனால், தேவாலயத்தை பைரவர் கோயிலாக மாற்ற அனைவரும் சம்மதித்தனர்.
அதன்படி, தேவாலயத்திற்கு காவி நிற வண்ணம் அடிக்கப்பட்டது. அங்கு இருந்த சிலுவை குறியீடு அழிக்கப்பட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. அதோடு, சிலையும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
மேலும், கிறிஸ்தவ மத போதகராக இருந்த கவுதம் என்பவர் கோயிலின் அர்ச்சகராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இனி ஞாயிற்றுக்கிழமை பிராத்தனைக்கு பதில் தினமும் காலை, மாலை வேளைகளில் பைரவருக்கு பூஜை நடத்தப்படும்” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |