CIBIL Score-உம் வங்கி கடனும்; இது அதிகரிக்க என்ன செய்யலாம்?
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் கடன் பெற்று பொருட்களை வாங்கிறார்கள்.
வட்டி இல்லாத கடன் தொடங்கி, மிக குறைந்த வட்டி என்ற விளம்பரம் மூலம், நிறுவனங்கள் மக்களை கவர்ந்து வருகிறது.
ஒருவர் யார் என்றே தெரியாமல் எப்படி கடன் வழங்குகிறார்கள் என்ற சந்தேகம் உங்களிடத்தில் எழுந்திருக்கும். அதற்கு உதவுவது தான் Cibil Score.
எந்த வங்கியில் கடன் வாங்கச் சென்றாலும், EMI-ல் பொருள் வாங்கினாலும் நம் CIBIL SCORE பார்த்த பின்பு தான் கடன் வழங்குவார்கள்.
அவ்வளவு முக்கியத்துவம் CIBIL SCORE -க்கு வந்தது எப்படி?
CIBIL என்ற அமைப்பின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Cibil Score என்றால் என்ன?
Cibil என்பது Credit Information Bureau (India) Limited ஆகும். இது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.
அனைத்து வங்கிகளும், கடன் தரும் நிறுவனங்களும் அவர்களிடம் கடன் பெற்றோர் விவரங்களை இந்த அமைப்பிற்கு வழங்கி விடுவார்கள்.
இது போன்ற நிறைய அமைப்பு இருக்கலாம். ஆனால் வங்கிகளில் கடன் கொடுப்பதற்கு முன்னர் Cibil Score ஐ பார்ப்பார்கள்.
முன்னர் வாங்கிய கடன்களையும் அதற்கான கடனைத் தவணைகளையும் தவறாமல் செலுத்தி உள்ளீர்களா ஆகிய விவரங்களை அந்த வங்கி இந்த நிறுவனத்திற்கு வழங்கும்.
இதை வாங்கிய Cibil நிறுவனம் Credit History என்ற ஒரு கோப்பை (File) தயார் செய்யும். இதன் மூலம் கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு குறியீட்டெண் வழங்கப்படும்.
நீங்கள் தவணை தவறாமல் செலுத்தியிருந்தால், உங்கள் கடன் குறியீடு நல்ல நிலையும் தவறியிருந்தால் கடன் குறியீட்டின் மதிப்பும் குறைந்து இருக்கும்.
இதை வைத்து தான் வேறு ஒரு வங்கியில் கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பார்கள். இதுவே நியதியாகவும் இருக்கிறது.
நீங்கள் EMI இல் ஒரு பொருள் வாங்கியிருந்தால் அதற்கான தவணை முறையை உரிய நேரத்தில் செலுத்தி இருந்தால் Cibil Score நல்ல சிலையை காட்டும்.
அதாவது 750 முதல் 900 வரை காட்டும். இவ்வாறு காட்டினால் எந்தவொரு வங்கியிலும் உடனே கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுவே 650 முதல் 750 வரை இருந்தால் கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பார்கள்.
550 முதல் 650 வரையில் இருந்தால் கடன் கிடைப்பது கஷ்டம்.
அதிலும் 300 முதல் 550 வரையில் இருந்தால் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு முற்றிலும் இருக்காது. இது தான் Cibil-இன் மதிப்பு. அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிக்கு நம்பிக்கை வரும்.
Cibil Score கண்டறிவது எப்படி?
Cibil Score ஐ myscore.cibil.com என்ற இணையத்தளத்தின் வாயிலாக கண்டறிய முடியும்.
முதலில் பார்ப்பவர்கள் கட்டணம் செலுத்தாமல் பார்க்கலாம். ஆனால் இரண்டாவது முறையில் பார்க்க விரும்புபவர்கள் கட்டாயம் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும்.
CIBIL மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
CIBIL அறிக்கையில் காணப்படும் கடன் வரலாற்றைப் பயன்படுத்தி CIBIL மதிப்பெண் பெறப்படுகிறது.
கடந்த 36 மாதங்களில் கடன் வாங்கியவர்களின் கடன் விபரத்தை இது கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
ஒருவர் பெற்ற வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள், automobile கடன்கள், overdraft facilities போன்ற அனைத்து வகையான கடன்களும், அவற்றின் கட்டண வரலாறும் வைத்து கணக்கிடப்படுகிறது.
CIBIL மதிப்பெண்ணை எப்படி அதிகரிக்கலாம்?
உங்கள் கடன் EMIகள் மற்றும் கடன் அட்டை பணத்தை உரிய திகதிக்குள் செலுத்துவது ஒரு நல்ல CIBIL மதிப்பெண்ணை அதிகரிக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |