சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
திரையரங்குகள் என்பவை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. அவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு விடயமும் ஆகும்.

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் முதல், திரையரங்குகளுக்கு அருகிலிருக்கும் உணவகங்கள், கடைகளில் நடக்கும் வியாபாரம், திரையரங்குகள் மற்றும் அது சார்ந்த தொழில்கள் உருவாக்கும் வருவாய் என நாட்டின் பொருளாதாரத்தில் திரைப்படங்களுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.
கோவிட் காலகட்டத்தில் திரைத்துறை சந்தித்த இழப்பும், அதைத் தொடர்ந்து பலர் OTT வாயிலாக தங்கள் திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்ததும் நினைவிருக்கலாம்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5,300,000 பேர் திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள்.
2026ஐப் பொருத்தவரை, குறிப்பாக, இத்தாலி மொழி பேசும் Ticino மாகாணத்தில், திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் மாகாணங்களில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 29 சதவிகிதமும், ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் 16 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், சுவிஸ் திரைப்படங்களைவிட, மற்ற நாடுகளின் தயாரிப்பான திரைப்படங்களைக் காணச் சென்றவர்கள் எண்ணிக்கை 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மே மாதத்தின் நடுப்பகுதியில், 20ஆவது சினிமா வாரத்தின்போது சுமார் 365,000 பேர் திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள்.
அந்த நேரத்தில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, பெரிதும் கவனம் ஈர்த்துவரும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை சித்தரிக்கும் மைக்கேல் என்னும் திரைப்படம் ஆகும்!
என்றாலும், கோவிடுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். ஏனென்றால், 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுமார் 6,000,000 பேர் திரைப்படங்கள் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |