அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட தனுஷ் - வைரலாகும் போஸ்டர்!
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள அவருடைய நான்காவது படத்தின் பெயர் குறித்த போஸ்ட்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷின் 'D52'
நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இயக்கி நடிக்கவுள்ள 'D52' படத்தின் பெயரானது 'இட்லி கடை' என வைக்கப்பட்டுள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனுடன் இணைந்து, தனுஷ் இயக்கும் மற்றும் நடிக்கும் குறித்த திரைப்படமானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
NEW BEGINNINGS! 💥
— DawnPictures (@DawnPicturesOff) September 17, 2024
Dawn Pictures launches with a bang!
We are proud to announce our maiden project #D52, starring @dhanushkraja sir 🔥@aakashbaskaran @wunderbarfilms @DawnPicturesOff #DawnPictures @theSreyas pic.twitter.com/Iet4X0cdD1
இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பாடல் காட்சியுடன் தேனியில் தொடங்கியுள்ளது.
'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார், அசோக் செல்வன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஏற்கனவே இரண்டு பாடல்களை முடித்துள்ளார்.
மேலும், மிகவும் எளிமையாக அமைந்துள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The wait is over! #D52 is officially titled Idly Kadai 😊 @dhanushkraja @aakashbaskarann @wunderbarfilms @thesreyas @gvprakash @RedGiantMovies_ @MShenbagamoort3 #DawnPictures #IdlyKadai #DD4 pic.twitter.com/2ajpVDg02q
— DawnPictures (@DawnPicturesOff) September 19, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |