ரூ. 120 கோடி சம்பளம்.., ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?
சமீப காலமாக திரைப்படங்களை பார்ப்பதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் காலம் மாறி, தற்போது ஓடிடியில் படங்களையும், வெப்சீரிஸ்களையும் கண்டுகளிக்கிறார்கள்.
இதில் பாலிவுட்டில் நடிகர்கள் பலரும் ஓடிடி படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மனோஜ் பாஜ்பாய், ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட பலர் ஓடிடிக்கான பிரத்யேக வெப்சீரிஸ் மற்றும் படங்களில் நடிக்க அதிக சம்பளத்தை கேட்கின்றனர்.
அந்தவகையில், ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அஜய் தேவ்கன்.
ஓடிடியில் அதிக சம்பளம் பெறும் நடிகரான அஜய் தேவ்கனின் முதல் வெப்சீரிஸ் 2022ல் வெளியான Rudra: The Edge of Darkness ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.
இந்த தொடருக்காக அஜய் தேவ்கன் பெற்ற ஊதியம் ரூ.120 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக பதால் லோக் தொடரில் நடித்த ஜெய்தீப் அஹ்லாவத் ரூ.20 கோடி சம்பளம் பெறுகிறாராம்.
சைஃப் அலிகான் ரூ.15 கோடியையும், நடிகர் பங்கஜ் திரிபாதி ரூ.12 கோடியையும் ஓடிடி தொடர் மற்றும் படங்களுக்கு ஊதியமாக பெறுகிறார்களாம்.
அண்மையில் கரீனா கபூர் ஜானே ஜான் ஓடிடி படத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் பெற்ற ஊதியம் ரூ.12 கோடி என கூறப்படுகிறது.
மேலும், ஃபேமிலி மேன், சைலன்ஸ், கில்லர் சூப், ஆகிய தொடர்களில் நடித்த மனோஜ் பாஜ்பாய் ரூ.10 கோடி ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |