20 அடி உயரம்! சர்க்கஸ் நிகழ்ச்சியில் தவறி கீழே விழுந்த இளைஞர்.. நெஞ்சை பதற வைக்கும் காட்சி
ஜேர்மனியில் நடந்த சாகச நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Duisberg பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி FlicFlac சர்க்கஸ் குழுவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நன்கு பயிற்சி பெற்ற கலைஞர்கள் ஒரு பலகையில் இருந்து மற்றொரு பலகைக்கு தாவி சாகசம் செய்தனர்.
அந்த வகையில் Lukazs ஸ்கேட்டர் மூலம் தாவ முயன்றார். அப்போது அவருடைய ரோலர் பிளேடில் கோளாறு ஏற்பட்டு எதிர்முனையில் இருந்த உயரமான மேடையை பிடிக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் 20 அடி உயரத்தில் இருந்து Lukazs தவறி விழும் காட்சியை கண்ட சக ஊழியர்கள் அவரை விரைவாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Lukazs லேசான காயங்களுடன் உயிர் தப்பித்துள்ளார்.
Lukazs 20 அடி உயரத்தில் இருந்து விழும் காட்சி சமூகவலைதளபக்கங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவில் சர்க்கஸ் நேரலை நிகழ்ச்சியின் போது பயிற்சியாளர் ஒருவர் சர்க்கஸ் சிங்கத்தால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.