இந்த இந்திய நகரங்களில்... கனேடிய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ருடோ நிர்வாகம்
இந்தியாவில் குறிப்பிட்ட இந்த நகரங்களில் கனேடிய குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்
இந்தியாவில் இருந்து தமது தூதர்கள் 41 பேர்களை குடும்பத்தினருடன் வெளியேற்றிய சில மணி நேரங்களில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அறிக்கையில், நாடு முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் கனேடிய மக்கள் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இரு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு சமூக ஊடக பக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டம் மற்றும் கனடாவுக்கு எதிரான போராட்டங்களில், கனேடிய குடிமக்கள் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கனேடிய குடிமக்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும், அந்நியர்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூருவில்
மேலும், மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூருவில் உள்ள துணைத் தூதரகங்களில் உள்ள அனைத்து நேரடி சேவைகளையும் கனடா இடைநிறுத்தியுள்ளது. மட்டுமின்றி இந்த மூன்று நகரங்களில் உள்ள தனது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
@reuters
அத்துடன் இந்தியாவில் உள்ள அனைத்து கனேடியர்களும் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், புது டெல்லியில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கனடா 41 தூதர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவிலிருந்து திரும்பப் பெற்றது, இந்திய அரசு அவர்களின் இராஜதந்திர உரிமைகளை பறிக்க இருப்பதாக அச்சுறுத்தியது.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் பகிரங்கமாக தெரிவித்ததிலிருந்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, இது வெறும் அபத்தம் என புறந்தள்ளியது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்தது கனேடிய நிர்வாகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |