ரஷ்யா தொடர்பில் சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆலோசனை
சுவிட்சர்லாந்து, தன் குடிமக்களை ரஷ்யாவிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்யாவிலிருக்கும் சுவிஸ் குடிமக்கள், தற்காலிகமாக ரஷ்யாவை விட்டு வெளியேற ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பயண ஆலோசனையில், சுவிஸ் குடிமக்களில் யார் கட்டாயம் ரஷ்யாவிலிருந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இல்லையோ, அவர்கள் அனைவரும் தற்காலிகமாக ரஷ்யாவிலிருந்து வெளியேறும்படி ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை வெளியேற்ற எந்த ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்படவில்லை. அவரவர் தாங்களாகவே ஏற்பாடுகள் செய்துகொண்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ள சுவிஸ் வெளியுறவு அமைச்சகம், ரஷ்யாவிலிருப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை அவரவர் முடிவுக்கே விடுவதாகவும் தெரிவித்துள்ளது.