கனடாவில் வாழ்வதால் மட்டுமே தங்களுக்கு கனேடிய குடியுரிமை இருப்பதாக தவறாக புரிந்துகொள்ளும் சிலர்: ஒரு விளக்கச் செய்தி
வெளிநாட்டவர்கள் கனேடியக் குடிமக்களாவதற்கு சில வழிமுறைகள் உள்ளன என்றாலும், உங்களுக்கு கனேடிய குடியுரிமை உள்ளதா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் கனேடிய குடியுரிமைக்கான ஆதாரம் என்னும் ஆவணத்தைப் பெறலாம்.
இந்த ஆவணம் நீங்கள் ஒரு கனேடியக் குடிமகன்தான் என்பதற்கு நிச்சயமான ஆதாரமாக இருக்கும். அத்துடன் இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி நீங்கள் கனேடிய பாஸ்போர்ட்டும் பெறலாம்.
கனடாவில் வாழ்ந்தும், சிலருக்கு கனேடிய குடிமகனாக இல்லாமலிருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
யாரெல்லாம் கனேடிய குடிமகனாக இல்லாமலிருக்க வாய்ப்புள்ளது?
நீங்கள் கனடாவில் வெளிநாட்டுத் தூதர்களுக்குப் பிறந்திருந்தாலோ,
உங்கள் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ரத்து செய்யப்பட்டிருந்தாலோ,
நீங்கள் கனேடிய குடியுரிமை வேண்டாம் என அறிவித்துவிட்டு, பிறகு மீண்டும் குடியுரிமை பெற விண்ணப்பிக்காமலிருந்தாலோ,
கனேடிய குடிமகனை மணந்திருந்தாலோ,
கனேடிய குடிமகனால் தத்தெடுக்கப்பட்டிருந்தாலோ,
உங்கள் அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலோ,
பல ஆண்டுகளுக்குக்கு கனடாவில் நிரந்தரக் குடிமகனாக இருந்திருந்தால், அல்லது,
2009ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு கனடாவுக்கு வெளியே கனேடிய பெற்றோருக்குப் பிறந்திருக்கும் பட்சத்திலும், உங்கள் பெற்றோர் இருவருமே கனடாவில் பிறக்கவில்லை அல்லது கனேடிய குடியுரிமை பெறவில்லை என்றாலோ கூட, மேற்கூறிய இத்தனை சந்தர்ப்பங்களின் கீழும் நீங்கள் கனேடிய குடிமகனாக இல்லாமலிருப்பதற்கு வாய்ப்புள்ளது.
இருந்தாலும், மேற்கூறிய எதுவாவது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் பட்சத்திலும், இன்னமும் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு உங்களுக்காக பல வழிமுறைகள் உள்ளன.
நீங்கள் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவராகிவிட்டால், அதற்குப் பிறகு கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதி பெறக்கூடும்.
மேற்கூறியதற்கு மாறாக, கீழ்க்கண்ட விடயங்களில் ஒன்று உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் கனேடிய குடிமகனாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் கனடாவில் பிறந்தவராக இருந்தாலோ (வெளிநாட்டுத் தூதர்களுக்குப் பிறந்தவர்கள் தவிர்த்து),
கனேடிய குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்தால் கனேடிய குடிமகனாக ஆகியிருந்தாலோ,
கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்து கனேடிய குடியுரிமை பெற்றிருந்தாலோ,
வயதுவராத வயதில் (minor), உங்கள் பெற்றோர் உங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பித்ததால் நீங்கள் கனேடிய குடியுரிமை பெற்றிருந்தாலோ
கனடாவுக்கு வெளியே பிறந்தாலும், உங்கள் பெற்றோரில் ஒருவராவது கனடாவில் பிறந்தவர்களாகவோ அல்லது நீங்கள் பிறப்பதற்கு முன் குடியுரிமை பெற்றிருந்தாலோ,
நீங்கள் கனேடிய குடிமகனாக இருக்க வாய்ப்புள்ளது.