இந்தியாவின் தங்கத் தலைநகரம் எது? நாடு முழுவதும் எங்கிருந்து தங்கம் விநியோகிக்கப்படுகிறது?
தங்கத்தின் மீதான பெரும் ஈர்ப்பு கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தங்கத்திற்கான சந்தை
தங்கம் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, நகைகள் செய்தல், சில அறுவை சிகிச்சைகளிலும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. மட்டுமின்றி, சுவிட்சுகள் மற்றும் மைக்ரோசிப்கள் ஆகியவற்றிலும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் ஒரு நகரத்தில் இருந்தே, மொத்த நாட்டிற்கும் தங்கம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த நகரத்தில் தங்கத்திற்கு என மட்டும் மிகப்பெரிய சந்தையும் அமைந்துள்ளது.
ஜல்கான் மற்றும் ரத்லம் பகுதியிலும் தங்கத்திற்கான சந்தை அமைந்துள்ளது. ஆனால் அவை மிகப் பெரியது அல்ல. நாட்டிலேயே தங்கத்திற்கான மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது மும்பையில் உள்ள ஜவேரி பஜாரில் தான்.
ஆனால் கேரளாவின் திருச்சூர் நகரையே இந்தியாவின் தங்கத் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் அமைந்துள்ள ஜவேரி பஜாரை நாட்டின் மிகப்பெரிய தங்கத்திற்கான சந்தையாக குறிப்பிடுகின்றனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றும் அடையாளப்படுத்துகின்றனர். கடந்த 160 ஆண்டுகளாக ஜவேரி பஜார் செயல்பட்டு வருகிறது. தங்க வணிகத்தில் பெயர் பெற்ற திரிபோவந்தஸ் ஜவேரி என்பவரால் 1864ல் இந்த சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜவேரி பஜாரில் இருந்தே நாட்டின் பெரும்பாலான இடங்களுக்கு தங்கம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சந்தையில் அற்புதமான பல்வேறு வகையான நகைகளும், ஈடு இணையற்ற தரமும் உள்ளன. வைரங்களும் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன.
தங்கத் தலைநகரம்
ஜவேரி பஜார் முதன்மையாக மொத்த விற்பனைக்கு பெயர் பெற்றது, அதாவது அதிக அளவுகளுக்கு விலை குறைவாக இருக்கும். ஆனால், சில்லறை கொள்முதல்களுக்கு, விலைகள் பெரும்பாலும் சந்தை விலைகளைப் பொறுத்து மாறுபடும்.
ஜவேரி பஜார் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சந்தையாக இருக்கலாம், ஆனால் கேரளாவின் திருச்சூர் இந்தியாவின் தங்கத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் தங்க வர்த்தகம் மற்றும் நகை உற்பத்திக்கு ஒரு குறிப்பிடத்தக்க மையமாகும்.
திருச்சூரில் ஏராளமான தங்க நகைகளை உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் மற்றும் கைவினைஞர்கள் உள்ளனர். திருச்சூர் மற்றும் ஜவேரி பஜார் மட்டுமின்றி, இந்தியாவின் மற்ற முக்கிய தங்க சந்தைகளில் மகாராஷ்டிராவின் ஜல்கான், மத்திய பிரதேசத்தில் ரத்லம் மற்றும் டெல்லியில் உள்ள சரஃபா பஜார் ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |