தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் - போராட்டத்தை அறிவித்த CJP

Cockroach Janta Party (CJP)
By Karthikraja Sep 25, 2026 08:39 AM GMT
Report

cjp to protest on oct 2 if cec gyanesh kumar not resign: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நாளைக்குள் பதவி விலக வேண்டும் இல்லையெனில் அக்டோபர் 2 முதல் போராட்டம் நடத்தப்படும் என CJP கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர் விவகாரம்

சில மாதங்களுக்கு முன்னர், இணையத்தில் உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP), நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தியது.  

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் - போராட்டத்தை அறிவித்த CJP | Cjp To Protest Oct 2 Demand Resign Cec Gyanesh

இந்தியாவையே உலுக்கும் வகையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பின்னர், தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

தற்போது, SIR உள்ளிட்ட தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் - போராட்டத்தை அறிவித்த CJP | Cjp To Protest Oct 2 Demand Resign Cec Gyanesh

இதனால், தலைமைத் தேர்தல் ஆணையர்பதவி விலக வேண்டும், SIR க்கு பின்னர் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

CJP போராட்டம்

இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செப்டம்பர் 27 ஆம் திகதிக்குள் பதவி விலகாவிட்டால், அக்டோபர் 2 ஆம் திகதி மும்பையில் போராட்டத்தை தொடங்கி நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம் என CJP அறிவித்துள்ளது. 

கூட்டணி வைத்தால் துணை முதல்வர் ஆக்குவதாக கூறிய ஆதவ் அர்ஜுனா - சீமான் பேச்சு

கூட்டணி வைத்தால் துணை முதல்வர் ஆக்குவதாக கூறிய ஆதவ் அர்ஜுனா - சீமான் பேச்சு

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஞானேஷ் குமார், "நாளைக்குள் ராஜினாமா செய்யவில்லை என்றால், CJP அக்டோபர் 2 அன்று மும்பையிலிருந்து தனது நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கி, இந்தியாவின் பிற நகரங்களுக்கும் எடுத்துச் செல்லும்.

இந்த காந்தி ஜெயந்தியன்று ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாம் உறுதியேற்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், CJP கட்சி பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும், மேலும் அவர் யாருடைய உத்தரவின் பேரில் செயல்பட்டார் என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட வேண்டும்.

நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தற்போதைய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களை நிறுத்திவைத்து, 2025 வாக்காளர் பட்டியலுக்கு திரும்ப வேண்டும். 

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் - போராட்டத்தை அறிவித்த CJP | Cjp To Protest Oct 2 Demand Resign Cec Gyanesh

பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும்வகையில் எஸ்.ஐ.ஆர் நடைமுறைகள் குறித்து ஆய்வுநடத்த சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். இதில் உச்ச நீதிமன்றத்திற்கும் பொறுப்பு உள்ளது.

மேலும் SIR பணிகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் கைப்பற்றி நீதிமன்ற பாதுகாப்பில் வைக்க வலியுறுத்திகிறோம். ஏனெனில் நாளை தீவிபத்தில் அனைத்தும் எரிந்துவிட்டது எனக் கூறிவிடுவார்கள்.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான 2023 ஆம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப்பட்டு, குடிமைச் சமூக உறுப்பினர்களின் தீவிரப் பங்கேற்புடன் நம்பிக்கையைத் தூண்டும் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US