பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி குறித்து அவதூறு: 10 பேர் மீது வழக்கு
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவி குறித்து அவதூறு பரப்பிய விடயம் தொடர்பில் 10 பேர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி குறித்து அவதூறு
பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் ஆணாகப் பிறந்தவர் என பிரான்ஸ் நாட்டவர்கள் சிலர் மட்டுமின்றி, அமெரிக்கப் பெண் ஒருவரும் வதந்திகள் பரப்பி வருகிறார்கள்.
அத்துடன், மேக்ரான் ஒரு மாணவராக இருக்கும்போதே அவரும் பிரிஜிட்டும் காதலிக்கத் துவங்கியதால், பிரிஜிட் ஒரு சிறுவனை ஏமாற்றியதாகவும் சிலர் கூறியதுண்டு.
இந்நிலையில், பிரிஜிட் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது மேக்ரான் தம்பதியர் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

நேற்று அந்த வழக்கு பாரீஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆவிகளுடன் பேசும் ஒருவர், விளம்பரத்துறையைச் சேர்ந்த ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர் ஒருவர், ஆசிரியர் ஒருவர் மற்றும் கணினி அறிவியலாளர் ஒருவர் என இரண்டு பெண்களும் எட்டு ஆண்களுமாக 10 பேர் நேற்று வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |