லண்டனில் கோர சம்பவம்: தாயாரும் இரு பிள்ளைகள் உட்பட 9 பேர்கள் மருத்துவமனையில்
தெற்கு லண்டனின் Clapham பகுதியில் நடந்த அமில வீச்சு சம்பவத்தில் ஒரு தாயாரும் இரு பிள்ளைகளும் உட்பட 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குடும்பத்தின் மீது
அமில வீச்சு நடந்த Clapham பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டனர். புதன்கிழமை இரவு சுமார் 7.25 மணியளவில் குறித்த அமில வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
@LNP
ஒரு குடும்பத்தின் மீது நடந்த தாக்குதல் இதுவென்றும், அவர்களுக்கு உதவச் சென்ற மூவரும் மூன்று பொலிசாரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் குறிப்பிடாத சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில், அந்த தாயாரும் இரு பிள்ளைகளும் நபர் ஒருவருடன் ஒரு வெள்ளை நிற காரில் இருந்துள்ளனர். திடீரென்று அந்த தாயாரும் நபரும் காருக்கு வெளியே, சாலையில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
@Thesun
திடீரென்று அந்த நபர் காருக்கு திரும்பி, அந்த வாகனத்தை குறித்த தாயாரின் மீது மோத முயன்றுள்ளார். இதனிடையே, அந்த தாயார் கண்கள் என கத்தியுள்ளார். இதனிடையே மீண்டும் அந்த நபர் காருக்கு வெளியே வந்து, அந்த தாயாரை எட்டித்தள்ளியுள்ளார்.
அந்த நபர் கைதாகவில்லை
இதனால் அந்த தாயார் நிலைகுலைந்து தரையில் விழுந்துள்ளார். இந்த சம்பவ இடத்தில் இருந்து மாயமான அந்த நபரைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
@LNP
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், தாயார் ஒருவருடன் இரு இளம் பிள்ளைகள் அமில வீச்சுக்கு இலக்காகியுள்ளதாகவும், மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மூன்று பொலிசாரும், சம்பவயிடத்தில் காணப்பட்ட பொதுமக்களில் மூவரும் இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரையில், மாயமான அந்த நபர் கைதாகவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
@thesun
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |