லண்டன் அமில வீச்சு விவகாரம்... தேம்ஸ் நதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்கள்
லண்டனின் Clapham பகுதியில் அமில வீச்சில் ஈடுபட்ட புலம்பெயர் நபர் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தற்போது இரண்டு சடலங்களை கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர் நபருடையது அல்ல
குறித்த சடலங்கள் இரண்டும் அப்துல் எஸேதி என்ற அந்த புலம்பெயர் நபருடையது அல்ல என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 35 வயதான எஸேதி பொலிசாரிடம் சிக்காமல் இருக்க தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவே பொலிசார் நம்புகின்றனர்.
Credit: Met Police
ஜனவரி 31ம் திகதி உள்ளூர் நேரப்படி 11.27 மணிக்கு அவர் அந்த பாலத்தில் காணப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். அதாவது அமில வீச்சு தாக்குதல் நடந்த 4 மணி நேரத்திற்கு பின்னர்.
கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள அதிகாரிகள், பாலம் கடந்து செல்லும் அந்த நபர் எஸேதியாக இருக்க வாய்ப்புள்ளதாகவே நம்புகின்றனர்.
Credit: Andrew Styczynski
அடையாளம் காணும் பணி
இந்த நிலையில் தற்போது தேம்ஸ் நதியில் இருந்து இரண்டு உடல்களை மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. காலை 10.13 மணியளவில் எச்எம்எஸ் பெல்ஃபாஸ்ட் அருகே முதல் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள லைம்ஹவுஸ் அருகே காலை 10.39 மணிக்கு இரண்டாவது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டு உடல்களையும் அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Credit: Met Police
மேலும், தற்போதைய சூழலில் எஸேதியின் உடல் மீட்கப்பட வாய்ப்பு குறைவு தான் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |