ஜேர்மனியில் சீக்கியர்களிடையே மோதல்: வெளியாகியுள்ள காட்சிகள்
ஜேர்மனியில், குருத்வாரா ஒன்றில், சீக்கியர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் சீக்கியர்களிடையே மோதல்
ஜேர்மனியிலுள்ள Moers என்னும் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றில் இருதரப்பு சீக்கியர்கள் மோதிக்கொண்டனர்.

மோதலின்போது, கத்தி, துப்பாக்கி முதலான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சிறப்பு பொலிஸ் படையினர் குவிக்கப்பட்டார்கள்.
🤯🇩🇪 Shocking scenes from Gurdwara Duisburg, Germany:
— Allen Hampton (@Hamp_Allen) April 20, 2026
Sikhs fighting inside sacred space, turbans flying, kirpans drawn on each other over Golak money, and a forced takeover by the previous management, who lost the election.
This violence isn't random. It's the direct result of… pic.twitter.com/47h4lni6w1
சுமார் 40 பேர் இரு தரப்பாக பிரிந்து மோதிக்கொண்ட நிலையில், குருத்வாராவுக்கு புதிய இயக்குனர்கள் குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பில் பிரச்சினை எழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குருத்வாராவின் நிதியை யார் சொந்தம் கொண்டாடுவது என்பது தொடர்பிலும் பிரச்சினை எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மோதலில் காயமடைந்த 11 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், யார் யாரை தாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |