ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய பொலிஸ்
அவுஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த பொலிசார் பெப்பர் ஸ்ப்ரே அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி நூற்றுக் கணக்கானோரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மெல்போர்ன் நகரில் பல பகுதிகளில் கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டதுடன் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை 500 பேருக்கு தொற்று உறுதியானதால் 6வது முறையாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்டோரியா நகரில் 700க்கும் மேற்பட்டோர் கொரோனா ஊரடங்குக்கு எதிராகத் திரண்டனர்.
இதனால் சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து பொலிசார் பெப்பர் ஸ்ப்ரே அடித்து கூட்டத்தை விரட்டியடித்தனர். மேலும் மெல்போர்ன் நகரில் 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிட்னியில் 32 பேர் கைதாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த 6 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.