பார்ட்டியில் மது அருந்திய சிறுவன்: பெற்றோருக்கு பயந்து எடுத்த முடிவு
பார்ட்டியில் மது அருந்திய சிறுவன் ஒருவன், தன் பெற்றோருக்கு தெரிந்துவிட்டால் தண்டிப்பார்களே என பயந்து ஏழாவது மாடியிலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டான்.
பெற்றோருக்கு பயந்து சிறுவன் எடுத்த முடிவு
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், கடந்த வார இறுதியில், 15 வயது சிறுவன் ஒருவன் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டான்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைய, விசாரணையின்போது, அவனது நண்பர்கள் சில விடயங்களை தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, ஃபேர்வெல் பார்ட்டி முடிந்து அந்த சிறுவனும் அவனது நண்பர்களும் மதுபான விடுதி ஒன்றிற்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.
ஆனால், வீடு திரும்பும்போது, மது அருந்தியதற்காக தன் பெற்றோர் தண்டிப்பார்களோ என அவனுக்கு பயம் வந்துள்ளது.
அவனுக்கு தைரியம் கொடுத்து அவனை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் அவனது நண்பர்கள்.
ஆனால், சிறிது நேரத்தில் அவன் ஏழாவது மாடியிலிருந்து குதித்துவிட்டிருக்கிறான்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், உயிரிழந்த சிறுவனின் நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட மதுபான விடுதிக்குச் சென்று விசாரித்துள்ளார்கள்.
பிள்ளைகள் மது அருந்தியது உண்மைதான் என தெரியவந்த நிலையில், சிறுவர்களை வெளியேற்றாமல் அவர்களுக்கு மதுபானம் பரிமாறிய அந்த மதுபான விடுதியின் உரிமத்தை ரத்து செய்யும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |