Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டுக்கு (Royal Enfield) போட்டியாக புதிய மோட்டார்சைக்கிளை பிரித்தானியாவின் கிளாசிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே ஜாவா (Jawa) மற்றும் யெஸ்டி (Yezdi) ஆகியவை இரண்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் தயாரிப்பாளரான கிளாசிக் லெஜெண்ட்ஸ் இப்போது மற்றொரு பிராண்டை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய சந்தையில் ரெட்ரோ மோட்டார்சைக்கிள்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக 650சிசி மோட்டார்சைக்கிளை வெளியிட கிளாசிக் லெஜெண்ட்ஸ் தயாராக உள்ளது.
கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது.
இது ஏற்கனவே உலக சந்தையில் BSA Goldstar என்ற பெயரில் விற்கப்படுகிறது.
கோல்ட் ஸ்டார் மோட்டார்சைக்கிள் நவீன அவதாரத்தில் வருகிறது. மேலே ஒரு twin pod instrument panel, முன் முனையில் ஒரு round headlamp மற்றும் ஒரு வட்ட BSA லோகோ உள்ளது.
Single-piece சீட், பின்புறத்தில் fender combo மற்றும் retro tail lamp இருக்கும் என்று தெரிகிறது.
Royal Enfield Interceptor மோட்டார்சைக்கிள் இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் வரும் நிலையில், BSA Goldstar-ல் 652 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் உள்ளது.
உலகளாவிய சந்தைகளில் கிடைக்கும், BSA கோல்ட் ஸ்டார் மோட்டார்சைக்கிள் எஞ்சின் அதிகபட்சமாக 45 bhp மற்றும் 55 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் இந்திய பதிப்பின் எஞ்சின் திறன் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ரெட்ரோ லுக் மோட்டார்சைக்கிள்களின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது வரை, இந்த பிரிவில் இன்னும் முன்னணியில் இருக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக மற்ற இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் இணைந்துள்ளனர்.
Triumph Motorcycles உடன் இணைந்து Bajaj Auto மற்றும் Harley Davidson-உடன் இணைந்து Hero Moto Corp. இணைந்து புதிய மோட்டார்சைக்கிள்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Royal Enfield, Classic Legends, Jawa, Yezdi motorcycles, Classic Legends third brand in India, BSA Motorcycles