15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் EV பேட்டரி - மூன்று IIT நண்பர்களின் சாதனை
Clean Electric’s EV battery charges in 15 minutes: மூன்று IIT நண்பர்கள் இணைந்து 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் EV பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
Clean Electric ஸ்டார்ட்அப்
இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், IIT-BHU-வில் படித்த மூன்று பழைய மாணவர்கள் ஆகாஷ் குப்தா, அபினவ் ராய், அங்கித் ஜோஷி இணைந்து Clean Electric என்ற ஸ்டார்ட்அப்பை நிறுவினர்.

பெரிய உற்பத்தி நிலையம்
இவர்களின் முக்கிய கண்டுபிடிப்பு, வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் EV பேட்டரி ஆகும். 2020-இல் போபாலில் ஒரு சிறிய வொர்க்ஷாப்பில் தொடங்கிய இவர்களின் முயற்சி, இன்று புனேவில் பெரிய உற்பத்தி நிலையமாக வளர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் EV டிரக் உருவாக்க முயன்றாலும், சார்ஜ் நேரம், ரேஞ்ச், பாதுகாப்பு போன்ற சவால்கள் காரணமாக பேட்டரி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினர்.
வெப்பத்தை கட்டுப்படுத்தும் முறை
Immersion Cooling Technology மூலம் பேட்டரி செல்களை சிறப்பு திரவத்தில் மூழ்கடித்து வெப்பத்தை கட்டுப்படுத்தும் முறையை உருவாக்கினர். இதனால் பேட்டரி வேகமாக சார்ஜ் ஆகும் போது கூட அதிக வெப்பம் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், Smart Temperature Modulation மற்றும் 0Kelvin System எனும் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம், பேட்டரி சார்ஜ் மற்றும் வெப்ப நிலையை நேரடியாக கண்காணித்து, தானாகவே சார்ஜ் வேகத்தை கட்டுப்படுத்தும் வசதி கொண்டுள்ளனர்.

இந்த பேட்டரிகள் தற்போது இந்தியாவின் பல மின்சார ஆட்டோ ரிக்ஷாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. தினமும் 200 கிமீ வரை பயணம் செய்யும் வாகனங்களில் கூட, 70,000-80,000 கிமீ பயணத்திற்குப் பிறகு வெறும் 4 சதவீதம் மட்டுமே திறன் குறைவு ஏற்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றுவரை 6,000-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு, மொத்தம் 2 கோடி கிமீ பயணத்தை நிறைவு செய்துள்ளன.
இந்த கண்டுபிடிப்பு, இந்திய EV சந்தையில் வேகமான சார்ஜிங், பாதுகாப்பு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |