18 நாட்களாக கடத்திவைக்கப்பட்டிருந்த குழந்தை விவகாரத்தில் புதிய திருப்பம்... குழந்தை கூறியுள்ள முக்கிய தகவல்
அவுஸ்திரேலியாவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு 18 நாட்களாக வீடு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த வழக்கில் எதிர்பாராத புதிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் Cleo Smith (4) என்ற குழந்தை தன் பெற்றோருடன் கேம்பிங் சென்றிருந்தபோது மாயமானாள்.
18 நாட்களாக பொலிசார் அவளைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவள் Carnarvon என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்துள்ளது.
அங்கு விரைந்த பொலிசார் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்த Cleoவை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த Terence Darrell Kelly (36) என்ற நபரை பொலிசார் கைது செய்தனர். அவர் இப்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், ஒரு விடயம் இடித்தது...
நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டை உடைத்து பொலிசார் உள்ளே நுழைந்தபோது Cleo பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்திருந்திருக்கிறாள்.
18 நாட்கள் வீடு ஒன்றில் தனிமையாக அடைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தை, நன்றாக உடை உடுத்தி நல நிலைமையில் இருந்தாள். மீட்கப்படும்போது, அவள், பயந்து, சோர்ந்து போய் இருந்ததுபோல் தெரியவில்லை.
அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.
குழந்தையிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது, புதிய விடயம் ஒன்றை அவள் தெரிவித்திருப்பதையடுத்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, தான் அந்த வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்தபோது, ஒரு பெண் வந்து தனக்கு தலை வாரி விட்டதாகவும், உடை மாற்ற உதவியதாகவும் Cleo தெரிவித்துள்ளாள்.
ஆக, குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் மற்றொரு பெண்ணுக்கும் இப்போது தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த மர்மப் பெண்ணைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.