பளபளப்பான சருமத்தை பெற.., பேரழகி கிளியோபாற்றாவின் அழகின் ரகசியம்
எகிப்தின் ராணி கிளியோபாற்றா பளபளப்பான மற்றும் கவர்ச்சியான சருமத்திற்கு பெயர் பெற்றவர்.
அவரது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க பாலில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.
அந்தவகையில், கிளியோபாற்றாவின் சரும பராமரிப்பு முறையை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1 கப்
- உலர்ந்த ரோஜா இதழ்கள்- 1 கப்
- லாவெண்டர் எண்ணெய்- தேவையான அளவு
- இந்துப்பு- 1 ஸ்பூன்
- ஓட்ஸ்- ½ கப்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் இளஞ்சிவப்பு இந்துப்பு வைத்து அதில், 1 ஸ்பூன் லாவெண்டர் எண்ணெயை ஊற்றி நன்கு கலக்கவும்.
இதனுடன் பால் மாறும் ரோஜா இதழ்களை உலர்த்தி பொடி செய்து அந்த பொடியையும் சேர்த்து நன்கு கலந்து ஓட்ஸ் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் இதனை சருமத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விருப்பப்பட்டால் இதனுடன் தேன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
இந்த கலவை நீங்கள் நன்கு உலர விட்டு பின்னர் ஒரு ஜாடியில் சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம்.
இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது சோப்பை பயன்படுத்த வேண்டாம்.
கிடைக்கும் பலன்கள்
பால் மற்றும் தேன் இரண்டும் சருமத்தை மென்மையாக்குகின்றன. மேலும் இது இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை புதியதாகவும், இனிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
லாவண்டர் எண்ணெய் முகப்பருவைக் குறைக்கும் திறன் கொண்டது, இது சருமத்தின் நிறத்தை ஒளிரச்செய்கிறது.
இந்துப்பு, சருமத்தை புத்துயிர் பெற தோல் திசுக்களை பலப்படுத்துகிறது, இதனால் சருமம் இளமையாக இருக்கும்.
ரோஜா இதழ்களின் தூள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை வழங்குகிறது,
மேலும், ஓட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |