விரல் சொடக்கு மூலம் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட் - கிரிக்கெட்டில் வினோத மோசடி
விரல் சொடக்கு மூலம் நடுவரை ஏமாற்றிய சர்ச்சை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கிளிக்கி பாண்டிங் சர்ச்சை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஐபிஎல் போன்ற தொடர்களில் பந்து மட்டையில் பட்டதா என்பதை உறுதிப்படுத்த டிஆர்எஸ், ஸ்னிக்கோமீட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கும்.
ஆனால் இங்கிலாந்தின் கிளப் கிரிக்கெட் லீக்குகளில் இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாமல், நடுவர் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பதன் அடிப்படையிலே முடிவுகளை வழங்குகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில் வினோத மோசடி நடைபெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

வைரலாக இணையத்தில் பரவி வரும் காணொளியில், ஸ்லிப் அல்லது சில்லி பாயிண்ட் பகுதியில் நின்றிருந்த சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் வீரர் பிரையன் டிவைன், பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்கும் முன்னர், பேட்டை கடக்கும் போது பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலியை உருவாக்க தனது கை விரல்களால் பலமாக சொடக்கு போட்டு ஒலி எழுப்பியுள்ளார்.
இந்த போலி சத்தத்தை நிஜமான என கருதிய நடுவர்கள் பலமுறை அவுட் வழங்கியுள்ளனர்.
@Saltburncc First slip clicks his fingers to imitate an edge, bat nowhere near it and given out.
— Ben Mummery (@ben_mummery) July 27, 2026
This is about the worst case of cheating I’ve ever seen in cricket.
Apparently, their keeper has a huge amount of catches this season.@talkSPORT @bbctms @SkyCricket @TailendersPod pic.twitter.com/iM7lZfKF5q
இது குறித்து வடக்கு யார்க்ஷயர் மற்றும் தெற்கு டர்ஹாம் கிரிக்கெட் லீக் ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சர்ச்சைக்கு பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், சால்ட்பர்ன் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் போவ்ஸ் தனது கடைசி 8 போட்டிகளில் 31 கேட்சுகளைப் பிடித்துள்ளார். இதில் ஒரே இன்னிங்ஸில் 8 கேட்சுகளை பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட் கீப்பிங் ஆட்டமிழப்புகளுக்கான சாதனையே 7 ஆகும்.
இந்த சர்ச்சைக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் பெயரை நக்கலாகச் சேர்த்து, அந்த வீரருக்கு ‘க்ளிக்கி பாண்டிங்’ என இணையவாசிகள் செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |