பருவநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் மழை பெய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம்
In Switzerland, climate change affecting rainfall patterns: பருவநிலை மாற்றத்தால், சுவிட்சர்லாந்தில், மழை பெய்யும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றம் குறித்து சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கும்போதெல்லாம், அது எங்கோ யாருக்கோ, நமக்கென்ன என இருந்தவர்கள் பலர்.
ஆனால், இன்று பருவநிலை மாற்றம் உலகமெங்கும் என்னென்ன மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது என்பதை கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறோம் நாம்.
சுவிட்சர்லாந்தில் மழை பெய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பணக்காரர்கள் வெயில் காலத்தில் ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளுக்குச் செல்வது வழக்கம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, பனிப்பொழிவு இல்லாததால் பல பனிச்சறுக்கு ரிசார்ட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெப்பத்தால் மலையில் பனி உருகுவதால், பெருவெள்ளம் முதலான பேரழிவுகளை உலகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் மழை பொழிவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, அளவான மழை நின்று நிதானமாக பெய்யுமானால், மழைநீர் பூமிக்குள் இறங்கும், நிலத்தடி நீர் உயரும்.
ஆனால், திடீரென ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒரே மணி நேரத்தில் பெய்யுமானால், அந்த தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டுவிடும், அதனால் பயன் இருக்காது என்பது மட்டுமல்ல, அது பெருவெள்ளம் முதலான பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.
அதுதான் தற்போது சுவிட்சர்லாந்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆம், எப்போதாவதுதான் மழை பெய்கிறது, ஆனால், அப்படி மழை பெய்யும்போது, கொட்டித்தீர்க்கிறது, அதனால், பெருவெள்ளம் ஏற்படுகிறது.
வெப்பநிலையில் ஒரு டிகிரி அதிகரிக்கும்போது, அது காற்றில் சுமார் 7 சதவிகித நீராவியை தக்கவைக்க, சக்தி வாய்ந்த புயல்களுக்கு அது வழிவகுக்கிறது.
வெப்பம் மூன்று டிகிரி அதிகரிக்கும் நிலையில், மணிநேர மழைப்பொழிவு 30 சதவிகிதம் வரை உயரக்கூடும்.
அதன் விளைவாக, திடீர் வெள்ளப்பெருக்குகள், நிலச்சரிவுகள் அதிகரிப்பதுடன், பழைய தரநிலைகளின்படி கட்டப்பட்டுள்ள சாலைகள், பாலங்கள் மற்றும் வடிகால் உள்கட்டமைப்புகளுக்கு அதிக அழுத்தமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |