பருவநிலை மாற்றத்தால் உலகில் அழிந்துபோன உயிரினங்கள்.., எது தெரியுமா?
உயிரினங்களின் இறப்புக்கு அதன் இடம்பெயர்வு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
காலநிலை மாற்றங்களான கடல் மட்டம் உயர்வு, பாலைவனமாக்கல், மண் அரிப்பு, வெள்ளம், காட்டுத் தீ போன்றவை விலங்குகளை அதன் சொந்த இடத்தில் இடம்பெயர முக்கிய காரணமாகிறது.
அந்தவகையில், பருவநிலை மாற்றத்தால் உலகில் அழிந்துபோன உயிரினங்கள் பற்றி பார்க்கலாம்.
ஸ்பிக்ஸின் மக்காவ்
அளவில் சிறியதும், நீல நிற தோற்றத்திலும் இருக்கும் ஸ்பிக்ஸ் மக்காவ் பிரேசிலின் வெப்பமண்டல காடுகளை பூர்வீகமாகக் கொண்ட ஒரு கிளி வகையைச் சேர்ந்த பறவையாகும்.
இது 2019ஆம் ஆண்டில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் அழிந்துபோன இனமாக அறிவிக்கப்பட்டது.
தங்கத் தேரை
தவளை வகையைச் சேர்ந்த இந்த தங்கத் தேரை மத்திய அமெரிக்க நாட்டின் கோஸ்டாரிகாவின் நாட்டில் வாழ்ந்து வந்தது.
1998ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, எட்டு ஆண் தேரையும், இரண்டு பெண் தேரையும் இருந்ததாகவும் பின் காலநிலை மாற்றத்தால் அழிந்துபோனதாக நம்பப்படுகிறது.
பைரினியன் ஐபெக்ஸ்
பைரினியன் ஐபெக்ஸ், ஸ்பெயினைச் சேர்ந்த காட்டு ஆடு வகையைச் சேர்ந்ததாகும். இவை பிரான்சின் தெற்குப் பகுதியில் உணவுக்காக வேட்டையாடப்பட்டது.
கடைசி பைரினியன் ஐபெக்ஸ் 2000ஆம் ஆண்டில் இறந்துவிட்டது, அதன் பின்னர் அந்த இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பைஜி டால்பின்
சீனாவில் ஓடும் மிக நீளமான நதியான யாங்சியின் நீர்ப்பரப்பில் பைஜி டால்பின் வாழ்ந்தது. ஐ.யூ.சி.
எண்ணின் பட்டியல் கணக்குப்படி 2008ஆம் ஆண்டில் இவை அழிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இவை நன்னீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது.
கரீபியன் மாங்க் சீல்
இந்த கரீபியன் மாங்க் சீல் மேற்கிந்திய சீல் அல்லது கடல் ஓநாய் என்றும் அழைக்கப்படும்.
இந்த கரீபியன் மாங்க் சீல், 2008 ஆம் ஆண்டில், இந்த இனம் அதிகாரப்பூர்வமாக அழிந்துவிட்டதாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.
பிண்டா தீவு ஆமை
ஈக்விடாரின் பிண்டா தீவை பூர்வீகமாகக் கொண்ட கலபகோஸ் ஆமையின் அழிந்துபோன துணையினமாகும்.
இந்த பெரிய ஆமை 1800களில் திமிங்கலங்களும், கப்பல் பணியாளர்களும் உணவுக்காக இதை வேட்டையாடியதால் அழிவை நோக்கி நகர்ந்தது.
19ஆம் நூற்றாண்டில் மீனவர்கள் வேட்டையாடியதால் அவை முற்றிலுமாக அழிந்துபோனதாக கூறப்படுகிறது.
கருப்பு காண்டாமிருகம்
மேற்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகம் மற்ற காண்டாமிருக இனங்களுடன் ஒப்பிடும்போது மரபணு ரீதியாக தனித்துவமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகம் 2011ல் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
டோடோ
இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவு தான் டோடோ என்கிற இந்த அழிந்துபோன பறவையின் வாழ்விடமாகும்.
பறக்க முடியாத டோடோவின் இனம் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கூறப்படுகிறது.
தைலாசின்
டாஸ்மேனியன் புலி அல்லது தைலாசின் ஆனது ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் பப்புவா நியூ கினியா தீவுகளில் வாழ்ந்த ஒரு உயிரினமாகும்.
இது ஓநாய் மற்றும் புலியின் தோற்றத்தைக் கொண்டுள்ளதால், இது அதன் கலப்பினமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |