ஜேர்மனியின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம் குறித்து சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தாலும், அந்தக் குரல் இதுவரை சரியாக யார் காதில் விழவேண்டுமோ அவர்கள் காதில் விழவேயில்லை.
பருவநிலை மாற்றம் குறித்து துணிச்சலாக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலரான சிறுபெண் கிரேட்டா தன்பெர்க், சமீபத்தில்கூட மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பருவநிலை மாற்றம்
மனிதர்களைத்தான் கைது செய்யவும் கட்டுப்படுத்தவும் முடியும். இயற்கையை ஏதாவது செய்யமுடியுமா? பிரான்சில் சரியான பருவநிலையில் பனி பெய்யாததால், பனிச்சறுக்கு செய்ய பனி போதாமல், ரிசார்ட்கள் பாதிக்கப்பட்டு பிரான்சின் வருவாய் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இப்போது, ஜேர்மனிக்கான நேரம் வந்துவிட்டது. ஆம், முக்கியமான பொருட்கள் சிலவற்றின் போக்குவரத்துக்குப் பயன்படும் ரைன் நதியில் போதுமான தண்ணீர் இல்லை.
நிலக்கரி, அமிலங்கள் போன்ற சில ரசாயனங்கள் முதலான பொருட்களைக் கொண்டு செல்ல விமானம் போன்ற போக்குவரத்தை பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம். ஆகவே, அவற்றை கப்பல் மூலமாகத்தான் கொண்டு சென்றாகவேண்டும்.
ஆனால், ஜேர்மனியின் சரக்குப் போக்குவரத்துக்கு முக்கிய வழியான ரைன் நதியில் போதுமான தண்ணீர் இல்லை. பெரிய சரக்குக் கப்பல்கள் பயணிக்கவேண்டுமானால், தண்ணீர் அதிக அளவில் இருந்தாகவேண்டும்.
ஆக, ஜேர்மனியின் பொருளாதாரத்தையும் பருவநிலை மாற்றம் பாதிக்கத் துவங்கியுள்ளது.
மாற்று ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள்
எனவே, கப்பல் மூலம் ரசாயனங்களை கொண்டு செல்ல முடியாது, ஜேர்மன் ரயில்களில் இந்த ராசாயனங்களைக் கொண்டு செல்லவேண்டுமானால், ரயில் பாதைகள் மற்றும் சாலைகளை தரம் உயர்த்தவேண்டும்.
ஆகவே, குறைந்த ஆழத்தில் பயணிக்கக்கூடிய படகுகளை வாங்கவும், தயாரிக்கவும் ஜேர்மன் வர்த்தக நிறுவனங்கள் ஆவன செய்துவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |