மாறும் வானிலை... பிரித்தானியாவில் கொட்டித் தீர்க்க இருக்கும் மழை
Heavy rain and thunderstorms set to batter Britain: பிரித்தானியாவை மழையும் புயலும் புரட்டி எடுக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றை வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், பிரித்தானியா இடி மின்னலுடன் மழையை எதிர்கொள்ள இருக்கிறது.
மாறும் வானிலை...
ஆம், வரும் நாட்களில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 7.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை, இடி மின்னலுடன் கனமழை மற்றும் மழையின் காரணமாக திடீர் வெள்ளம், இவற்றால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஆகிய விடயங்கள் எதிர்பார்க்கப்படுவதாலேயே, மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
என்றாலும், பிரித்தானியாவில் கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், இந்த மழை உடனடியாக வறட்சியை தீர்த்துவிடப்போவதில்லை என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |