நீரிழிவு நோய்யை கொத்தவரங்காய் கட்டுப்படுத்துமா? வெளியான மருத்துவ தகவல்
மலிவாக கிடைக்கும் கொத்தவரங்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், கொத்தவரங்காயில் விட்டமின் ஏ, சி, கால்சியம், புரதம், இரும்புச்சத்து, போலேட் காணப்படுகிறது.
கொத்தவரங்காயில் உள்ள இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை பயக்கும். மேலும், இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நம் உடலின் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். மேலும், இரத்த சோகை வராமல் தடுக்கும்.
சரி வாங்க... கொத்தவரங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா என்று பார்ப்போம் -
கொழுப்பு குறைக்க
கொத்தவரங்காயில் அதிகளவு நார்சத்து உள்ளது. அதிகமாக கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது இதில் உள்ள நார்ச்சத்து உம் உடம்பில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கும். மேலும், இருதய பிரச்சினை வராமல் தடுக்கும். மேலும், கொத்தவரங்காய் நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவி செய்யும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு
தினமும் உணவில் கொத்தவரங்காயை சேர்த்துக் கொண்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்து நம் உடம்பில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கொத்தவரங்காயில் குறைந்த அளவு கிளைசெமிக் இருப்பதால், டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவி செய்யும்.
எலும்புகளுக்கு
நன்மை பயக்கும் கொத்தவரங்காயை நம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், எலும்புகளுக்கு வலுவை சேர்க்கும். மேலும், அதில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
குறிப்பு
வாதம், பித்தம் உள்ளவர்கள் மட்டும் கொத்தவரங்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறி சாப்பிட்டால் பிரச்சினை உங்களுக்குத்தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |