நடிகர் புனித்ராஜ்குமாரின் உடலை பார்த்து கதறி அழுது நெற்றியில் முத்தமிட்ட கர்நாடகா முதல்வர்! கண்கலங்க வைக்கும் புகைப்படம்
பிரபல திரைப்பட நடிகரான புனித்ராஜ்குமாரின் சடலத்தை பார்த்து கதறி அழுத முதல் அமைச்சர் அவருக்கு இறுதியாக முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார், நேற்று முன் தினம் காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தன்னுடைய வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி மேற்கொண்ட போது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் உடனடியாக மயங்கிவிழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மரண செய்தி ஒட்டு மொத்த கன்னட திரையுலகை மட்டுமின்றி, அம்மாநில மக்களையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் போன்றவைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் பின், யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அவரது தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது அங்கிருந்த கர்நாடக மாநில முதல்வர் Basavaraj Bommai புனித்ராஜின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். அதன் பின் அவருடைய நெற்றியில் முத்தமிட்டார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.