காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: ஆ.ராசாவின் பழைய வீடியோ வைரல்
காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர் சாதாரணமாக பேசினால் என்ன அர்த்தம் என்று ஆ.ராசா பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
வைரலாகும் பழைய வீடியோ
தமிழக மாவட்டமான சிவகங்கை, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், 25 கஸ்டடி மரணங்கள் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டி காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆ.ராசா பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், "கஸ்டடி மரணத்தை தடுப்பதற்கு முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டுமே தவிர காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர் சர்வசாதாரணமாக பேசினால் என்ன அர்த்தம்?
முதலமைச்சராக நீங்கள் இருப்பதற்கு எந்தவித தார்மீக அடிப்படையும் கிடையாது. அதில் எந்தவிதமான தகுதியும் கிடையாது" என்றார்.
அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை -மகன் மரணம் தொடர்பாக ஆ.ராசா பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |