வெள்ளத்தில் அமைச்சர் சிக்கியது கூட முதல்வருக்கு தெரியவில்லை: கிண்டலடிக்கும் அண்ணாமலை
தென்தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் சிக்கியது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அமைச்சர் மீட்பு
தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக பாதிப்படைந்தது. இதில், ஏரல் பகுதியில் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கினார்.
பின்னர், 3 நாட்கள் கழித்து அமைச்சரை பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இதனை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அண்ணாமலை கூறியது..
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக கடந்த டிசம்பர் 18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த அமைச்சர்களில் ஒருவரான வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனை களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது, மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த டிசம்பர் 18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
— K.Annamalai (@annamalai_k) December 20, 2023
அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப்… https://t.co/hMqNFGbQX1 pic.twitter.com/g7jIqDjmVU
தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக ‘இந்தி’ கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு, திமுக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |