புயலின் வேகம் திடீரென மாறிவிடுகிறது.,ஓரளவுக்குதான் கணிக்க முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஃபெங்கல் புயலின் தாக்கத்தை கணிப்பது கடினமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஃபெங்கல் புயலினால் நேற்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.
சென்னையில் தாழ்வான இடஙக்ளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக அகற்றி வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் துல்லியமாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், "வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |