தை மகளை வரவேற்போம்., தாய் தமிழைப் போற்றிடுவோம்- தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 14ஆம் திகதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது..,
தை மகளை வரவேற்போம்; தாய் தமிழைப் போற்றிடுவோம்.
உழைப்புக்கு மரியாதை செலுத்தி, உழவுக்கு துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாதான் பொங்கல்.
பொங்கலை பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை ஜன13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீரும் சிறப்புமாக அவரவர் ஊர்களில் நடத்த வேண்டும்.
கலை, இலக்கியம், விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து மகிழ்ந்திட வேண்டும்.
இல்லத்தின் முன்பு இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று வண்ணக்கோலமிட்டு தை மகளை வரவேற்போம்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |