7 பேர் விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை.. குடியரசுத் தலைவருக்கு பறந்த கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் டி.ஆர்.பாலு நேரில் வழங்கினார்.
9.9.2018 ம் தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்திற்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், எழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள்.
உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து - எழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
— Thiruppathy K (@thiruppathyk) May 20, 2021