முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் பதிவு
2009ஆம் ஆண்டு மே 18ம் தேதி ஈழப்போரின் இறுதிநாளில் முள்ளிவாய்க்காலில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதை தமிழினப்படுகொலையாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் தமிழினப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தலை இலங்கை, தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
— TVK Vijay (@TVKVijayHQ) May 18, 2026
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!" என குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |