மும்பை பள்ளி மாணவியின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்
மும்பையில் உள்ள பள்ளி மானவி ஒருவர் தன்னை சந்திக்க விரும்பியதால், அவரின் ஆசையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
மாணவியின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர்
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு சென்றிருந்தார்.
அப்போது, பிரனுஷ்கா என்ற மும்பை பள்ளி மாணவி, நான் உங்களின் பெரிய ரசிகை என்றும், மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்றும் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மாணவியின் ஆசையை நிறைவேற்ற, தமிழக முதலமைச்சர் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு மாணவியையும், அவரது பெற்றோரையும் வரவைத்து சந்தித்து பேசினார். மேலும், மாணவிக்கு புத்தகம், பரிசுப்பொருள் வழங்கி சிறிது நேரம் பேசினார்.
வீடியோ வெளியிட்ட முதல்வர்
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வீடியோவையும் பகிர்ந்து,"மும்பையில், உள்ள மாணவி பிரனுஷ்கா என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றினேன்.
மணிப்பூரில் நடந்த வன்முறை அவரை போன்ற ஒரு பள்ளிச் சிறுமியைக் கூட எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உழைக்க அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு தெளிவான நினைவூட்டல். ஐஏஎஸ் அதிகாரியாகும் பிரனுஷ்காவின் கனவு நனவாகட்டும்" என்று கூறியுள்ளார்.
In #Mumbai, I fulfilled the wish of this bright and compassionate girl Pranushka to meet me.
— M.K.Stalin (@mkstalin) September 1, 2023
It pains me to see how the violence in #Manipur has affected even a schoolgirl like her. It's a stark reminder for those in power to work towards lasting peace and harmony.
I wish… https://t.co/yVVYVF6sWc pic.twitter.com/C6QDYDj1Ns
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |