கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் தோல்வி
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு. க ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் 2011ஆம் ஆண்டு முதல் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.
கடந்த 2021 தேர்தலில் 1,05,522 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்த நிலையில், தற்போது தோல்வியை சந்தித்திருப்பது திமுகவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |