நேருக்கு நேர் சந்தித்த விஜய் - உதயநிதி; என்ன நடந்தது?
சட்டசபையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.
நேருக்கு நேர் அமர்ந்திருந்த விஜய் - உதயநிதி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது.
முதலில், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார்.
அதைதொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழி ஏற்க உள்ளனர்.
இந்நிலையில், சட்டமன்றத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சர் விஜய்யும் நேருக்கு நேர் அமர்ந்திருந்தனர். இருவரும் எதிர்எதிரே அமர்ந்திருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஆனால், முன்னாள் முதலமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்க வந்த போது முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யும் சிரித்து கொண்டே பதில் வணக்கம் செய்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வணக்கம் வைத்த போது, முதலமைச்சர் விஜய் பதில் வணக்கம் வைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |