பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் உடலுக்கு விஜய் அஞ்சலி
தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.
இதனை தொடர்ந்து, அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். pic.twitter.com/Nyzr0Z4c4H
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 10, 2026
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பாரதிராஜவின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முழு அரசு மரியாதை
மேலும் மறைந்த தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 10, 2026
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர்…
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |