முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்த பேச்சு - திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்
cm vijay asks sorry in assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்காக முதல்வர் விஜய் மன்னிப்பு கோரியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்ட அமைச்சர்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், முன்னாள் முதல்வர் என்று மட்டும் கூறாமல் கருணாநிதி என பெயரை குறிப்பிட்டு பேசினார்.

பெயரை குறிப்பிடதற்கு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை முன்னவர் செங்கோட்டையன், ரஞ்சித்குமாரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சட்டமன்றத்தில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்தில் கருணாநிதி என பெயரைக் குறிப்பிட போது அதனை வாபஸ் வாங்க சொல்லி மன்னிப்பு கேட்க சொன்னார்" என குறிப்பிட்டார்.
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்

இதன் பின்னர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய முதல்வர் விஜய், "உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு தான். அவர் சார்பாக நான் sorry கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |