சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா.., முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்
CM Vijay Attends Sonia Gandhi Book Launch in Delhi- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி செல்கிறார்.
டெல்லி செல்லும் முதல்வர்
சோனியா காந்தி எழுதியுள்ள "Belonging: A Journey of Love" என்ற சுயசரிதை நூலின் வெளியீட்டு விழா, டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக இன்று பகல் 1 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், இரவு 11.45 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும், மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு இறுதி அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்தச் சூழலில் முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |